UAE Tamil Web

வாகனங்களை நிறுத்திவிட்டு சாலையில் தொழுகை நடத்திய ஓட்டுனர்கள் – காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு..!

abudhabi

சாலையின் ஓரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு தொழுகை நடத்த வேண்டாம் என வாகனவோட்டிகளை அபுதாபி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சாலையின் எந்தப் பக்கத்திலும் வாகனங்களை நிறுத்துவது விபத்திற்கோ அல்லது போக்குவரத்து நெரிசலுக்கோ வழிவகுக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று சமூக வலைத்தலங்களில் பேருந்து மற்றும் ட்ரக் ஓட்டுனர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு தொழுகை நடத்துவது குறித்து அபுதாபி காவல்துறை எச்சரித்துள்ளது.

அபுதாபி காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்துத் துறை இயக்குனரகம் பேருந்து, ட்ரக் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்களை இதுகுறித்து எச்சரித்துள்ளது. ஓட்டுனர்கள் அருகில் உள்ள மசூதிகளுக்கோ, அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கோ அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்றோ தொழுகை நடத்துமாறும் சாலைகளில் வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெடரல் போக்குவரத்து சட்டத்தின் 62 வது பிரிவின்படி இது குற்றம் எனவும் இதற்காக 500 திர்ஹம்ஸ் வரையில் அபராதம் விதிக்கப்படும் எனவும் இயக்குனரகம் எச்சரித்துள்ளது.

abudhabi
0 Shares
Share via
Copy link