UAE Tamil Web

ரமலான் முதல் வாரத்தில் மட்டும் இத்தனை சாலை விபத்துக்களா? – போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு..!

accident

ஷார்ஜாவில் ரமலான் துவங்கியதில் இருந்து (ஏப்ரல் 13) 1400 சிறிய அளவிலான சாலை விபத்துகள் நேர்ந்திருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஃபித் ஆட்டோமோட்டிவ் சொலுயூஷன்-ல் விபத்து மேலாண்மை அதிகாரியாகப் பணியாற்றிவரும் அப்துல் ரஹ்மான் அல் ஷம்சி இதுகுறித்துப் பேசுகையில், பெரும்பாலான விபத்துகள் லேன்களை மாற்றும் போது, இரு வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளி விடாதபோது, டிரைவர்கள் விழிப்புடன் செயல்படாத காரணத்தினால், அலட்சியமாக வாகனம் ஓட்டியதால் மற்றும் அதிவேகத்தால் நிகழ்ந்திருக்கின்றன.

தரவுகளின்படி பெரும்பாலான விபத்துகள் இப்தார் நேரத்தையொட்டியே நடைபெற்றிருக்கின்றன.

வாகனவோட்டிகள் சாலைவிதிகளை மதித்து செயல்படும்படி குறிப்பாக இப்தார் நேரத்தின் போது கூடுதல் கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறு ஷம்சி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு டிரைவரும் சாலை பாதுகாப்பை மனதில் நிறுத்தியே வாகனங்களை இயக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.

ஒருவேளை சிறிய விபத்துகள் நேர்ந்தால், வாகனங்களை சாலையோரத்திற்கு நகர்த்துமாறும், ரஃபித் அப்ளிகேஷன் மூலமாக அதிகாரிகளுக்கு தகவல் அளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

accident
0 Shares
Share via
Copy link