UAE Tamil Web

அபுதாபி: ரமலானை முன்னிட்டு பார்க்கிங், டோல் கேட் மற்றும் பேருந்து இயக்கத்திற்கான புதுப்பிக்கப்பட்ட நேரங்களை அறிவித்த போக்குவரத்து மையம்..!

NAT-INTER-CITY-BUS

ரமலானை முன்னிட்டு அபுதாபியின் பொதுப் போக்குவரத்து, கட்டண பார்க்கிங் (Mawaqif) நேரங்கள், டோல் கேட் செயல்படும் நேரம், பேருந்துகள் மற்றும் ஃபெர்ரி இயக்கப்படும் நேரங்கள் ஆகியவற்றில் மாற்றம் கொண்டுவந்துள்ளதாக அபுதாபி ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் அறிவித்துள்ளது.

கட்டண பார்க்கிங் சேவை (மவாகிஃப்)

ரமலான் மாதத்தில் கட்டண பார்க்கிங் சேவையானது பின்வருமாறு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமைகள் – புதன்கிழமைகள் : காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ; இரவு 9 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரையிலும்.

வியாழக்கிழமைகள்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், இரவு 9 மணி முதல் 12 மணி வரை.

வெள்ளிக்கிழமைகள்: காலை 12 மணி முதல் சனிக்கிழமை காலை 8.59 மணி வரை எந்த கட்டணமும் செயல்படுத்தப்படாது.

இரவுநேர தொழுகையான தராவீஹ்-ல் பங்கேற்பவர்கள் மசூதிகளைச் சுற்றியுள்ள இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம்.

குடியிருப்பாளர்களுக்கான பார்க்கிங் இடங்கள் பற்றிய விதிமுறைகள் தினந்தோறும் இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 8.00 மணி வரை தொடர்ந்து பின்பற்றப்படும்.

டார்ப் டோல் கேட் சிஸ்டம் (Darb Toll Gate System)

டோல் கட்டண நேரங்கள் ரமலான் மாதத்திற்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, சனிக்கிழமை முதல் வியாழன் வரையிலான நாட்களில் காலை 8 மணி முதல் காலை 10 மணி வரையிலும் மற்றும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை டோல்களைக் கடக்கும் வாகனங்களுக்கு மட்டும் கட்டணமானது வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து சேவைகள்

அபுதாபி மற்றும் அதன் புறநகர் பேருந்துகளைப் பொறுத்தவரையில் A10, A20, A40, 405 மற்றும் 406 தவிர மற்ற அனைத்து பேருந்துகளும் வழக்கமான நேரத்தில் இயங்கும். மேலும், மேற்குறிப்பிட்டுள்ள பேருந்துகள் மாலை 6 மணிவரையில் மட்டுமே இயக்கப்படும். ரமலான் மாதத்தின் முதல் தேதியிலிருந்து 26 ஆம் எண் கொண்ட பேருந்து சேவை ரத்து செய்யப்படும் என போக்குவரத்து மையம் தெரிவித்துள்ளது.

அல் அய்ன் மற்றும் அதன் புறநகர் பகுதிகள்

ரமலான் மாதத்தில் அல் அய்ன் அதன் புறநகர் பகுதிகளில் பேருந்து சேவையானது பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வ.எண் சேவை எண் சேவை
1. 900, 940, 960, 990, 590, 495 கடைசி பயணம் அதிகாலை 1 மணிக்கு நீட்டிக்கப்படும்.
2. 930, 950, 980  45 நிமிட இடைவெளியில் அதிகாலை 1 மணி வரை செயல்படும்.
3. 450 கடைசி பயணம் இரவு 9 மணிக்கு நீட்டிக்கப்படும்.
4. 460, 491, 496, 560, 595 கடைசி பயணம் காலை 12 மணிக்கு நீட்டிக்கப்படும்.
5. 550 கடைசி பயணம் இரவு 10 மணிக்கு நீட்டிக்கப்படும்.
6. 901, 941, 902, 991, 350, 360, 375, 380, 390, X90, H1 எந்த மாற்றங்களும் இல்லாமல் அதன் வழக்கமான நேர அட்டவணையில் இயங்கும்.

அல் தஃப்ரா பகுதி

அல் தஃப்ரா பகுதியில் பேருந்தானது இப்தார் நேரமான காலை 6.30 மணிமுதல் இரவு 7.45 மணிவரை நிறுத்தப்படும். மற்ற நேரங்களில் வழக்கமான அட்டவணையில் இயங்கும்.

ஃபெர்ரி சேவைகள் (Ferry Services)

தல்மா தீவு – ஜெபல் அலி தன்னா துறைமுகம் மற்றும் அல் சாதியாத் தீவு – அல் அலியா இடையேயான ஃபெர்ரி சேவைகள் வழக்கமான நேரத்தில் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் சேவை மையங்கள்

ரப்தான், அபுதாபி, அல் ஜாஹிலி மற்றும் அல் அய்னில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செயல்படும். இருப்பினும் 24 மணி நேர சேவைக்கு வாடிக்கையாளர்கள் ITC.யின் வலைத்தளம், டார்ப் அப்ளிகேஷன் மற்றும் 80088888 அல்லது 600535353 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் தெரிவித்துள்ளது.

NAT-INTER-CITY-BUS
0 Shares
Share via
Copy link