ஷார்ஜாவில் உள்ள உணவகங்கள் ரமலான் மாதத்தில் முஸ்லீம் அல்லாதவர்களுக்காக உணவு வழங்க அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் என ஷார்ஜா அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஷார்ஜா நகராட்சி வெளியிட்டுள்ள சமூக வலைத்தள செய்தியில் உணவகங்கள் இது தொடர்பாக விண்ணப்பித்துவருவதாகத் தெரிவித்துள்ளது.
#بلدية_مدينة_الشارقة #الشارقة #shjmunicipality #sharjah #رمضان pic.twitter.com/kLiSqI8iM5
— بلدية مدينة الشارقة (@ShjMunicipality) April 6, 2021
அதேநேரத்தில், உணவகங்கள் தங்களது கட்டிடத்தின் முகப்புப் பகுதியில் உணவுப் பொருட்களை வைப்பதற்கான பெர்மிட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை கருத்தில்கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி தெரிவித்துள்ளது.