UAE Tamil Web

ரமலானை முன்னிட்டு 645 சிறைக்கைதிகள் விடுதலை – அபுதாபி, ஷார்ஜா ஆட்சியாளர்கள் அறிவிப்பு..!

sharjah_ruler_resources1

உச்ச சபையின் உறுப்பினரும், ஷார்ஜாவின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி (Dr. Sheikh Sultan bin Muhammad Al Qasimi) ரமலானை முன்னிட்டு மனிதாபிமான அடிப்படையில் அந்த எமிரேட்டில் உள்ள  206 சிறைக் கைதிகளை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

கைதிகளின் வாழ்வில் புதிய அத்தியாயத்தைத் துவங்கவும், அவர்களுடைய குடும்பங்களில் மகிழ்ச்சி பெருகவும், சமூகத்துடன் மீண்டும் ஒன்றி வாழவும் ஷார்ஜா ஆட்சியாளர் இம்முடிவை எடுத்துள்ளார்.

அபுதாபி

இதேபோல, அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் அபுதாபியின் சிறைச்சாலைகளில் உள்ள 439 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.