UAE Tamil Web

இந்த வருடத்திற்கான ஜக்காத் அல் பித்ர் தொகையை அறிவித்தது அரசு – அனைவரும் ஜக்காத் வழங்குமாறு அரசு வேண்டுகோள்..!

MONEY

இந்த வருடத்திற்கான ஜக்காத் அல் பித்ர் தொகையாக நபர் ஒருவருக்கு 20 திர்ஹம்ஸ் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமீரக அரசு தெரிவித்துள்ளது. ரமலான் தொழுகை முடிவடைவதற்கு சில நாட்கள் முன்னதாக ஏழைகட்கு வழங்கப்படும் தொகையே ஜக்காத் அல் பித்ர் எனப்படுகிறது. விருப்பமுள்ள தனிப்பட்ட நபர்கள் 20 திர்ஹம்ஸ்க்கு அதிகமாகக் கொடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது தேவைக்கு அதிகமாக பணம் வைத்திருக்கும் ஆண்/பெண் அதனைப் பிறருக்குக் கொடுக்க கடமைப்பட்டவர் என ஸல், ஜக்காத் அல் பித்ர்-ஐ வரையறுக்கிறார்.

குடும்பத்தை ஏற்று வழிநடத்துபவர், அக்குடும்பத்தில் உள்ள ஊதியம் பெறாத நபர்கள் ஒவ்வொருவருக்கும் இந்தத் தொகையை வழங்கிடவேண்டும்.

ஜக்காத் நிதியத்துக்கான ஷரியா கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கொரோனா சூழ்நிலை காரணமாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தொண்டு அமைப்புகள் மூலமாக மக்கள் தங்களது ஜக்காத் அல் பித்ர் -க்கான பணம் அல்லது உணவு வழங்குதலை மேற்கொள்ள முடியும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களால் துவங்கப்பட்ட நிதிக்கு அமீரக குடியிருப்பாளர்கள் தங்களது ஜக்காத் தொகையை அளிக்குமாறு கமிட்டி தெரிவித்துள்ளது.

ஜக்காத் அல் பித்ர் தொகையை ராமலான் முதல் நாளில் இருந்து ஈத் அல் பித்ர் காலை வரையிலோ அல்லது ஈத் தொழுகைக்கு முன்பாகவோ வழங்கிடவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

MONEY
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap