UAE Tamil Web

நாளைமுதல் ரமலான் நோன்பு : அமீரக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

ramadan (2)

சவூதி அரேபியாவின் பிறை பார்க்கும் கமிட்டி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிறை தென்படாததால் நாளை முதல் ரமலான் நோன்பு துவங்கும் என அறிவித்திருக்கிறது. ஆகவே இன்று (ஏப்ரல் 12) ஷபான் மாதத்தின் இறுதிநாள் எனவும், ரமலானுக்கு அடுத்த மாதமான ஷவ்வால் எப்போது துவங்கும் என்பது பிறை தென்படுவதைப் பொறுத்து பின்னர் அறிவிக்கப்படும் என கமிட்டி தெரிவித்திருக்கிறது.

இதனடிப்படையிலேயே ரமலான் மாதம் 29 நாட்கள் நீடிக்குமா? அல்லது 30 நாட்கள் நீடிக்குமா? என்பதைக்கூற முடியும்.

ரமலான் நேரங்களைப் பொறுத்தவரையில் அமீரகம் சவூதியைப் பின்பற்றும் என்றாலும், அமீரக பிறை பார்க்கும் கமிட்டி தற்போதுதான் இதனை உறுதி செய்தது.

ஆகவே, அமீரகம் முழுவதும் நாளை முதல் ரமலான் நோன்பு துவங்க இருக்கிறது.