UAE Tamil Web

அமீரகத்தின் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ரமலான் மாத வேலை நேரங்கள் அறிவிப்பு..!

அரபு மாதமான புனித ரமலான் வருகிற ஏப்ரல் 2 அல்லது 3 அன்று துவங்க இருக்கும் நிலையில் அமீரகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு ரமலான் மாதத்திற்காக வேலை நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ரமலான் மாதத்தில் திங்கள் முதல் வியாழன் வரை அமீரகத்தின் அரசு நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மதியம் 2:30 மணி வரை வேலை நேரங்களாகும். அதுவே வெள்ளிக்கிழமையின் போது காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அமீரகத்தின் மனிதவள மற்றும் அமீரகத்தின் அமைச்சகம் தனியார் நிறுவனங்களுக்கு ரமலான் மாதத்திற்காக வேலை நேரங்களை அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின் படி தனியார் நிறுவனங்கள் தினந்தோறும் வழக்கமாக செயல்படும் நேரங்களிலிருந்து 2 மணி நேரம் குறைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த வருடம் ரமலான் மாதம் 30 நாட்களைக் கொண்டிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளதால் ஈத் அல் ஃபித்ர் (நோன்பு பெருநாள்) மே 2ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிடப்பட்டுள்ள இந்த தேதிகள் பிறை தென்படும் அடிப்படையில் தான் உறுதி செய்யப்படும்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap