துபாய் மற்றும் அஜ்மானில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ரமலான் மாத வேலை நேரங்கள் அறிவக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் ஷார்ஜாவில் ரமலான் மாதத்தில் நிறுவனங்களுக்கான வேலை நேரங்களை அறிவித்த நிலையில், தற்போது துபாயும், அஜ்மானும் ரமலான் மாதத்திற்கான வேலை நேரங்களை அறிவித்துள்ளது.
இரண்டு எமிரேட்களிலும் மனிதவளத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு ஊழியர்களுக்கான வேலை நேரம் திங்கள் முதல் வியாழன் வரை, காலை 9 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையாகும்.
வெள்ளிக்கிழமைகளில், ஊழியர்கள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை வேலை நாட்கள் ஆகும்.
ஷிப்ட் முறையில் பணிபுரியும் ஊழியர்களின் வேலை நேரங்களை முதலாளிகள் தீர்மானிக்கலாம்.
துபாயில் உள்ள அரசு நிறுவனங்கள் தேவைக்கேற்ப நீண்ட நேர வேலைகளை செயல்படுத்த அனுமதிக்கப்படுகின்றன.
அரபு மாதமான புனித ரமலான் வருகிற ஏப்ரல் 2 அல்லது 3 அன்று துவங்க உள்ளது. ரமலான் மாதத்தில் திங்கள் முதல் வியாழன் வரை அமீரகத்தின் அரசு நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மதியம் 2:30 மணி வரை வேலை நேரங்களாகும். வெள்ளிக்கிழமையின் போது காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ரமலான் மாதம் 30 நாட்களைக் கொண்டிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளதால் ஈத் அல் ஃபித்ர் (நோன்பு பெருநாள்) மே 2ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடப்பட்டுள்ள இந்த தேதிகள் பிறை தென்படும் அடிப்படையில் தான் உறுதி செய்யப்படும்.