UAE Tamil Web

இந்தியாவிலிருந்து துபாய்க்கு வர இனி ரேபிட் PCR பரிசோதனை தேவையில்லை

இந்தியா மற்றும் அதன் நாடுகளில் இருந்து துபாய்க்கு வரும் பயணிகள் RT- PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிராவல்ஸ் நிறுவனம் மற்றும் விமான நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட புதிய சுற்றறிக்கையில், விமானம் புறப்படுவதற்கு 6 மணி நேரத்திற்குள் பயணிகள் விமான நிலயத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை. எனினும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை விமான நிலையங்களில் RT-PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

பிப்ரவரி 22 முதல், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணம் செய்ய 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR சோதனையின் நெகடிவ் சான்றிதழ் தேவை. பயணிகள் துபாய்க்கு வந்ததும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பரிசோதனை முடிவுகள் வரும் வரை பயணிகள் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது குறித்து FLY DUBAI இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள், “இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு விரைவான PCR சோதனைகளில் இருந்து விலக்கு அளிக்கிறது”.

எமிரேட்ஸ் விமான நிறுவனம் இதுகுறித்து இன்னும் அதன் இணையதளத்தில் குறிப்பிடவில்லை.

இந்த சுற்றரிக்கையை பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.

முன்னதாக, கொல்கத்தாவில் இருந்து துபாய்க்கு நேரடி விமானங்கள் மூலம் எமிரேட்ஸ், Fly Dubai, ஏர் இந்தியா மற்றும் இண்டிகோவில் பயணிக்கும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் விரைவான PCR சோதனை தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

அமீரகம் கடந்த ஆண்டு சில நாடுகளில் இருந்து பயணிகள் போக்குவரத்திற்கான கட்டுப்பாடுகளை நீக்கியதால், புறப்படும் விமான நிலையங்களில் விரைவான சோதனை தேவை என்று அதிகாரிகள் அறிவித்தனர்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap