UAE Tamil Web

800 வருடங்களுக்குப் பிறகு அமீரக வானில் இன்று தோன்ற இருக்கும் “அதிசய வெளிச்சம்” – வெறுங்கண்ணால் பார்க்கலாம்..!

Deneb-

அமீரக வானில் இன்று அதிசய வெளிச்சம் தோன்ற இருக்கிறது. இதனை மக்கள் வெறுங்கண்ணால் பார்க்கலாம் என்றாலும் தொலைநோக்கி அல்லது பைனாகுலர் வழியாகப் பார்த்தால் சிறந்த அனுபவத்தைப் பெறமுடியும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

- Advertisment -

அரிய வெளிச்சம்

சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோள்களான வியாழன் மற்றும் சனி இன்று மிக அருகில் ஒன்றையொன்று சந்திக்கின்றன. கிட்டத்தட்ட 800 வருடங்களுக்குப் பிறகு இந்த நிகழ்வு இன்று (21/12/2020) முன் மாலைப் பொழுதில் நடைபெற இருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய துபாய் வானியல் ஆய்வு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹசன் அல் ஹரிரி,’ குளிர்கால சங்கிராந்தியான (Winter Solstice) இன்று வியாழன் மற்றும் சனி ஆகிய இருபெரும் கோள்கள் மிக அருகில் இணைய இருப்பதால் பிரகாசமான ஒளி வானில் தோன்றும். 1/10 வது டிகிரி தொலைவில் இரு கோள்களும் இணைய இருப்பதால் இந்த அரிய வெளிச்சம் தோன்றுகிறது” என்றார்.

கடைசியாக 1623 ஆம் ஆண்டு இந்த இரண்டு கோள்களும் மிக அருகில் இணைந்ததாக கூறப்படுகிறது.

“நட்சத்திரங்களின் அமைவிடம் மற்றும் சூரியனின் வெளிச்சம் ஆகியவற்றின் தாக்கத்தால் இந்த நிகழ்வை பார்ப்பது கடினமாக இருக்கலாம். ஆனால் கடைசியாக 1226 ஆம் ஆண்டு நிகழ்ந்த வியாழன் – சனி கோள்கள் இணைவின்போது வெறுங்கண்ணில் மக்கள் அதனை தெளிவாகப் பார்க்க முடிந்ததாக எர்த்ஸ்கை இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இனி 2080 ஆம் ஆண்டு மீண்டும் இந்த அரிய வெளிச்சம் வானில் தோன்றும்” என ஹரிரி குறிப்பிட்டார்.