UAE Tamil Web

அமீரகம்: நீச்சல் குளத்தில் மிதந்த 4 வயது சிறுவன் மற்றும் இளம்பெண்ணின் உடல் – போலீஸ் தீவிர விசாரணை..!

SWIMMING-POOL-

கடந்த புதன்கிழமை இரவு ராஸ் அல் கைமாவின் அல் மாமோரா காவல் நிலையத்திற்கு போன்கால் வந்திருக்கிறது. ஹோட்டல் ஒன்றில் இருந்து அழைத்திருந்த பணியாளர் தமது ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் 2 உடல்கள் மிதப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். புதன்கிழமை இரவு சிறுவனின் பெற்றோர் வெளியே சென்றிருந்த வேளையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

அபுதாபியைச் சேர்ந்த இந்தக் குடும்பத்தில் பணிபுரிந்த எத்தியோப்பியாவைச் சேர்ந்த பணிப்பெண் (23) மற்றும் நான்கு வயது சிறுவன் எப்படி நீச்சல் குளத்திற்குச் சென்றனர் என்பது குறித்து விசாரித்தனர்.

அந்த ஹோட்டலில் தங்கியிருந்த விருந்தினர் ஒருவர் முதலில் நீச்சல் குளத்தில் இரு உடல்கள் மிதப்பதைப் பார்த்திருக்கிறார். உடனடியாக ஹோட்டல் நிர்வாகத்திடம் தெரிவிக்க, ஓடிச்சென்ற ஊழியர் ஊழியர் இரு உடலையும் வெளியே கொண்டுவந்திருக்கின்றார்.

சிறுவனின் பெற்றோரிடம் காவல்துறை இந்த துயரச் செய்தியை போன் மூலமாக தெரிவித்திருக்கின்றனர். இது சம்பந்தமாக ஹோட்டல் பணியாளர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது காவல்துறை.

நான்கு வயது சிறுவன் மற்றும் இளம்பெண்ணின் மரணம் அந்தப் பகுதியையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap