ராஸ் அல் கைமாவில் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள், சிவப்பு விளக்கை தாண்டுபவர்கள் மற்றும் சாலைகளில் விதிகளை பின்பற்றாதவர்களை பிடிக்க புதிய போக்குவரத்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ராஸ் அல் கைமாவில் அவாஃபி பாலம் சந்திப்பு மற்றும் அல் ஹடாஃப் சந்திப்பில் போக்குவரத்து விதிமீறல்கள் அதிகரித்து வருகிறது. இதனால் ராஸ் அல் கைமா காவல்துறை அந்த இரண்டு இடங்களிலும் புதிய கேமராக்களை பொருத்தி உள்ளது.
வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக (திங்கள்கிழமை) இன்று காவல்துறை தெரிவித்தது.
இந்த விதிகளை பின்பற்றாத ஓட்டுநர்களுக்கு 1,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும், பின்னர் 12 Black Mark பெறப்பட்டு, ஒரு மாதம் முழுவதும் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ராசல் கைமா காவல்துறை, அமீரக மின்னணு சேவை துறையுடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ராசல் கைமா காவல்துறையின் உயர் அதிகாரி தெரிவித்தார்.