ரமலான் மாதத்தில் தொடங்கப்பட்ட பிச்சை எடுப்பதற்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ராஸ் அல் கைமா காவல்துறை 50 பிச்சைக்காரர்களை கைது செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், பிச்சை எடுப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர், “பொது இடங்களில் பிச்சை எடுப்பவர்களைக் கட்டுப்படுத்த சிஐடி குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் உறுதியான நடவடிக்கைகளால் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையை குறைக்க இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் பிச்சை எடுக்கும் நிகழ்வைத் தடுக்க ராஸ் அல் கைமா காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.
குடியிருப்பாளர்கள் 999 அல்லது 072053474 என்ற எண்ணில் பிச்சை எடுப்பவர்கள் குறித்து புகார் தெரிவிக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.