UAE Tamil Web

ராஸ் அல் கைமா: சாலை ஓரத்தில் தொழுகை நடத்திய தொழிலாளி.. வாகனம் மோதி பலி

ராஸ் அல் கைமாவில் டிரக் வண்டிக்கு பின்னால் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த ஒரு தொழிலாளி மீது ​​டிரக் மோதியதில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

இதனால் உயிரிழந்த அந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு 100,000 திர்ஹம்ஸ் வழங்க டிரக் டிரைவருக்கும், காப்பீட்டு நிறுவனத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து ராஸ் அல் கைமா சிவில் நீதிமன்றம் கூறியதாவது: பள்ளியில் படிக்கும் அந்த தொழிலாளியின் மகனுக்கு உதவியாக அவனது தாயிடம் 30,000 திர்ஹம்ஸ் வழங்குமாறு உத்தரவிடப்பட்டது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, டிரக் ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமாக ஆசிய நாட்டு தொழிலாளி உயிரிழந்தார். குடும்பத் தலைவராக இருந்த அவரது இழப்பு குடும்ப உறுப்பினர்களுக்கு பெரும் பாதிப்பாகும். இதையெல்லாம் கடந்து அனைத்தையும் அவர்கள் எதிர்கொள்ளவும் தார்மீக சேதங்களைக் கருத்தில் கொண்டு 200,000 திர்ஹம்ஸை இழப்பீடாக வழங்க வேண்டும்.

டிரக்கை ஓட்டும் போது கவனம் செலுத்தாததால், தவறுதலாக தொழிலாளியின் மரணத்திற்கு காரணமான ஓட்டுநரை சிவில் நீதிமன்றம் கண்டித்தது. மேலும் இந்த விபத்து, போக்குவரத்து விதிமீறலுக்கான விபத்து என்று கூறிய காப்பீட்டு நிறுவனத்தின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap