UAE Tamil Web

இந்த 4 விதி மீறல்களுக்கு 50% போக்குவரத்து அபராத தள்ளுபடி சலுகை பொருந்தாது.! அதிகாரிகள் திட்டவட்டம்

RAK

49-வது அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு போக்குவரத்து அபராதங்களில் 50% தள்ளுபடியை ராஸ் அல் கைமா காவல்துறை அறிவித்துள்ளது.

- Advertisment -

இந்த சிறப்பு சலுகை திட்டம் டிசம்பர் 2 முதல் டிசம்பர் 8 வரை நடைமுறையில் இருக்கும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டு, பின் வரும் டிசம்பர் 23 வரை இந்த 50% சிறப்பு போக்குவரத்து அபராத தள்ளுபடி திட்டம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனிடையே நான்கு போக்குவரத்து விதிமீறல்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள 50% போக்குவரத்து அபராத தள்ளுபடியை பெற முடியாது என்று ராஸ் அல் கைமா போலீஸ் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி ஓட்டுநர் மற்றும் பிறரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுவது, மேற்கொண்டதை போலவே ஒரு கனரக வாகனத்தை ஓட்டுதல், ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தும் வகையில் இரைச்சலுடன் வாகனங்களை இயக்குதல், டிராஃபிக் போலீஸ் பேட்ரோலிடமிருந்து இருந்து தப்பித்தல் உள்ளிட்ட விதி மீறல்களில் ஈடுபடுவோர் இந்த 50% போக்குவரத்து அபராத தள்ளுபடியை பெற முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

மேற்காணும் கடுமையான மீறல்கள் சாலை பயனர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்று கூறியுள்ள RAK போலீஸ் போக்குவரத்து மற்றும் ரோந்து துறை இயக்குனர் பிரிகேடியர் அஹ்மத் அல் சாம் அல் நக்பி, எனேவே இத்தகைய விதி மீறல்களுக்கு சலுகை கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி உள்ளார்.