UAE Tamil Web

அமீரகம்: 27 சிறைக்கைதிகள் இஸ்லாத்தைத் தழுவினர்..!

Islam

ராஸ் அல் கைமாவின் சிறைச்சாலையில் உள்ள 27 கைதிகள் கடந்தாண்டு இஸ்லாத்தை தழுவியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

“இஸ்லாத்தைப் பற்றிய அறிமுக வகுப்பான தி முஸ்லீம்ஸ் (The Muslims) எங்களை முஸ்லீமாக மாற உதவியது” என கைதி ஒருவர் தெரிவித்தார்.

புனர்வாழ்வு அளிப்பதில் மத, இன மற்றும் மொழி அடிப்படையில் கைதிகளிடம் பாகுபாடு பார்ப்பதில்லை என ராஸ் அல் கைமா காவல்துறை தெரிவித்திருக்கிறது.

“நீதி, ஒருமைப்பாடு மற்றும் நேர்மறையான குடிமக்களை உருவாக்குதல் என்னும் உட்கட்டமைத்துறையின் வழிகாட்டுதலின்படி கைதிகளுக்கு இந்த சமுதாயத்தில் நல்முறையில் வாழ்ந்திட தன்னம்பிக்கையை அளித்துவருகிறோம்” என சிறைத்துறை தெரிவித்திருக்கிறது.

ராஸ் அல் கைமாவின் தண்டனை மற்றும் சீர்திருத்த மையங்களில் உள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வு மற்றும் பயிற்சி வகுப்புகள் காவல்துறையால் நடத்தப்படுகின்றன.

கைதிகளின் தண்டனைக்காலம் முடிவடைந்தபிறகு தன்னம்பிக்கையுடன் வாழ இந்த பயிற்சி வகுப்புகள் அவர்களுக்கு கைகொடுக்கும்.

குரானை மனப்பாடம் செய்தல், தொழில் துவங்குதல், தொழில் பயிற்சி மற்றும் தொழிலாளர் சந்தை பற்றி கற்பித்தல், இவற்றிற்கு இடையே பள்ளி மற்றும் நூலகங்களுக்குச் செல்ல அறிவுருத்தல் போன்றவற்றை காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

தச்சுத்தொழில், தையல், ஓவியம், கைவினைப்பொருட்கள் தயாரித்தல் போன்ற தொழிற்கல்வியையும் கைதிகளுக்கு காவல்துறையினர் அளிக்கின்றனர். இது சமூகத்தை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை அவர்களுக்கு அளிக்கிறது.

நேரடியான பயிற்சி வகுப்புகள் என்பதால் சிறைத்தண்டனை முடிவடைந்தவுடன் அவர்களால் எளிதில் பணிக்குச் செல்ல முடியும். சிறைக் கைதிகளால் செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள் அமீரகம் முழுவதும் பல்வேறு நிலையங்களில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.