UAE Tamil Web

தேசிய தினத்திற்காக அறிவிக்கப்பட்ட 50% போக்குவரத்து அபராத தள்ளுபடி சலுகை நீட்டிப்பு.! வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி…

rak

அமீரகத்தின் 49-வது தேசிய தினத்தை முன்னிட்டு போக்குவரத்து அபராதங்களில் 50% தள்ளுபடியை அறிவித்திருந்தது ராஸ் அல் கைமா காவல்துறை.

- Advertisment -

இந்த சிறப்பு சலுகை திட்டம் டிசம்பர் 2 முதல் டிசம்பர் 8 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 50% போக்குவரத்துக்கு அபராத தள்ளுபடி வழங்கும் நாட்களை ராஸ் அல் கைமா காவல்துறை நீடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த புதிய அறிவிப்பின் படி ராஸ் அல் கைமா வாகன ஓட்டிகளுக்கு வரும் டிசம்பர் 23 வரை, போக்குவரத்து அபராதங்களில் 50% தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கவும், அவர்களின் நிதிச் சுமைகளை குறைப்பாதையும் நோக்கமாக கொண்டது என்று RAK காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

அதே போல இந்த சலுகை திட்டத்தை பயன்படுத்தி தங்களது போக்குவரத்து அபராதங்களை செலுத்துவோரின் கருப்பு புள்ளிகள் ரத்து செய்யப்படும். இந்த தள்ளுபடி அனைத்து வகையான வாகனங்கள், அனைத்து போக்குவரத்து மீறல்கள் மற்றும் அனைத்து வாகனத் தண்டனைகளுக்கும் பொருந்தும் என்றும் கூறியுள்ளனர்.

தேசிய தினத்தை முன்னிட்டு ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன் மற்றும் புஜைரா ஆகிய எமிரேட்டுகளிலும் போக்குவரத்து அபராதங்களுக்கு 50% தள்ளுபடி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.