UAE Tamil Web

புத்தாண்டுப் பரிசாக 50 சதவிகித போக்குவரத்து அபராத தள்ளுபடியை அறிவித்த எமிரேட்..!

trafffic fine

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பொருளாதார சுமைகளைக் குறைக்கும் விதமாக போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தில் 50 சதவிகிதம் வழங்கும் திட்டத்தை ஜனவரி 3, 2021 ஆம் தேதிவரையில் நீட்டிப்பதாக ராஸ் அல் கைமா காவல்துறை அறிவித்திருக்கிறது.

- Advertisment -

பொதுமக்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி நிலுவையில் உள்ள தங்களது அபராதங்களை ஜனவரி 3 ஆம் தேதிக்குள் செலுத்துமாறு ராஸ் அல் கைமா காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

அதிவேகமாக காரை இயக்கியது மற்றும் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களுக்கான அபராதத் தொகைகளுக்கும் இந்த தள்ளுபடித் திட்டம் பொருந்தும். மக்கள் MOI அப்ளிகேஷன் மூலமாகவும் தங்களது அபராதத்தினை செலுத்தலாம். அதேவேளையில், சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களுக்கான அபராதத்தை செலுத்த விரும்புபவர்கள் அல் ஸாதி பகுதியில் உள்ள போக்குவரத்து மற்றும் உரிம சேவை மையம் (Traffic and Licensing Services Centre) மற்றும் வாகன சிறை வளாகத்திற்கு (Vehicle Impoundment Complex) நேரில் வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.