UAE Tamil Web

வரும்போது கொரோனா நெகட்டிவ் சான்றிதழோடு வாருங்கள் : ராஸ் அல் கைமா பொருளாதாரத்துறை அதிரடி..!

RAS_AL_KHAIMAH

ராஸ் அல் கைமாவின் பொருளாதார மேம்பாட்டுத்துறை (RAK-DED) அலுவலகத்திற்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களது வருகைக்கு முன்னதான 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை எடுத்துவரவேண்டும் என RAK-DED தெரிவித்திருக்கிறது.

இந்த நடைமுறை ஜனவரி 31 ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RAK-DED தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், கொரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும் விதமாக வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதி முதல் RAK-DED அலுவலகத்திற்கு வருகை தரும் பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களது வருகைக்கு முன்னதான 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். நெகட்டிவ் சான்றிதழை சமர்ப்பிக்காதவர்கள் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

RAS_AL_KHAIMAH
0 Shares
Share via
Copy link