fbpx
19.3 C
Dubai
November 25, 2020
UAE Tamil Web

பாலைவனத்தின் இன்னொரு முகம் உங்களுக்குத் தெரியாது – அமீரக காவல்துறையின் எச்சரிக்கை..!

RAK police

பாலைவனப் பகுதிகளில் ஓட்டக்கூடிய குவாட்பைக்குகளை சாலைகளில் ஓட்டுவது தவறு என ராஸ் அல் கைமா போக்குவரத்து மற்றும் ரோந்துத்துறை வாகனவோட்டிகளை எச்சரித்துள்ளது.

“வாகன விதிமீறலில் ஈடுபடுவோருக்கு 3000 திர்ஹம்ஸ் அபராதமும் 90 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும்” எனவும் ராஸ் அல் கைமா போக்குவரத்து மற்றும் ரோந்துத்துறை இயக்குனர் பிரிகேடியர் அகமது அல் சாம் அல் நக்பி தெரிவித்துள்ளார்.

“ராஸ் அல் கைமா முழுவதும் குவாட் பைக்குகளை ஓட்டுவோர் மற்றும் வாகனவோட்டிகளை கண்காணிக்க கூடுதல் ரோந்துப் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஸ்டண்ட் செய்வர்களை காவல்துறை தீவிரமாக கண்காணித்துவருகிறது” என நக்பி தெரிவித்தார்.

“குவாட் பைக்குகளை ஓட்டுவோர் பாதுகாப்பான பயண மற்றும் பொது பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும். தலைக்கவசம், பதிவு அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் யாரும் குவாட் பைக்குகளை ஓட்டக்கூடாது. பாலைவனப் பகுதிகளில் சவாரி செய்கையில் கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டும். பாலைவனத்தின் பாதுகாக்கப்பட்ட இடங்களை தவித்தல் வேண்டும். ” என நக்பி குறிப்பிட்டார்.

பாலைவனங்களில் பயணம் மேற்கொள்வது உயிரைப் பணயம் வைக்கும் செயலாகும். பாலைவனத்திற்குள் சென்றுவிட்டால் சில நேரங்களில் செல்போன் டவர் கிடைக்காமல் போகலாம். ஏதேனும் ஆபத்து என்றால் கூட மீட்புக்குழு சம்பவ இடத்தை நெருங்க நேரமாகலாம். ஆகவே குழுவாக செல்வது உசிதம் என நக்பி எச்சரித்தார்.

பாலைவனங்களில் குப்பைகளைக் கொட்டினால் 1000 திர்ஹம்ஸ் அபராதமும், 6 கரும்புள்ளிகளும் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுள்ளது. சமீபத்தில் கவனக்குறைவாக குவாட் பைக்குகளை இயக்கிய இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.



error: Alert: Content is protected !!