வாகனங்களை அதெற்கென பிரேத்யேகமாக ஒதுக்கப்பட்ட லேன்களில் ஒட்டி செல்லாமல், வேறு வாகனங்களின் லேன் பாதைகளில் இயக்கி செல்லும் ஓட்டுநர்களை ரேடர்கள் மூலம் கண்காணிக்க, ராஸ் அல் கைமா காவல் போக்குவரத்து மற்றும் ரோந்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ராஸ் அல் கைமா காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து துறை இயக்குநர் பிரிகேடியர் அஹ்மத் அல் சம் அல் நக்பி கூறுகையில், ராஸ் அல் கைமாவில் உள்ள அனைத்து டிராஃபிக் லைட் சந்திப்புகளிலும் ஒரு கண்காணிப்பு சாதனம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் லேன் ஒழுக்கத்தை பராமரிக்கத் தவறும் இலகுரக ஓட்டுனர்கள் கண்டறியப்பட்டு, போக்குவரத்து சட்டத்தின் பிரிவு 86-ன் படி அவர்களுக்கு விதி மீறலுக்கான 400 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.
சாலையில் போக்குவரத்து குறியீடுகள் மற்றும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியம் என்றார். குறிப்பாக சாலையை கடக்கும் நோக்கத்தில், பாதை விதியைக் கடைப்பிடிக்கத் தவறியது பல ஆபத்தான விபத்துக்களுக்கு காரணமாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
— شرطة رأس الخيمة (@rakpoliceghq) October 30, 2020
மேலும் பேசிய அவர் சாலை பாதுகாப்பை பராமரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் போக்குவரத்து சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்த போக்குவரத்து அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு டிரைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். டிராஃபிக் லைட் சந்திப்புகளில் செயல்படுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள், வாகனங்கள் ரெட் சிக்னலை தாண்டுதல், அதிக வேகத்தில் செல்லுதல் உள்ளிட்ட பல மீறல்களைக் கண்காணிக்கும் என்று விளக்கினார்.
شرطة رأس الخيمة تفعل جميع الرادارات لمراقبة عدم الإلتزام بخط السير الإلزامي
فعلت شرطة رأس الخيمة من خلال إدارة المرور والدوريات جميع الرادارات في الإمارة لمراقبة عدم التزام السائقين بخط السير الإلزامي pic.twitter.com/s5bsnsLz7L
— شرطة رأس الخيمة (@rakpoliceghq) October 30, 2020
மேலும் வாகனங்களை அதன் பிரத்யேக லேன்களில் வைத்திருக்கவும், சந்திப்புகளில் லேன்களை மாற்றுவதை தவிர்க்கவும், சாலை அடையாள பலகைகள் மற்றும் வண்ணப்பூச்சுகள் வலது அல்லது இடதுபுறம் திரும்ப அந்த இடத்தில அனுமதி உள்ளதா என்பதை தெளிவாக குறிப்பிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.