UAE Tamil Web

3 திர்ஹம்ஸ் கட்டணத்தில் இ-ஸ்கூட்டர் – மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் சேவை..!

e-SCOOTTER

ராஸ் அல் கைமாவில் இ – ஸ்கூட்டர் சேவை மீண்டும் துவங்கப்படுவதாக ராஸ் அல் கைமா போக்குவரத்து ஆணையம் (RAKTA) இன்று தெரிவித்திருக்கிறது. ஃபெனிக்ஸ் (FENIX) உடன் இணைந்து இந்த எமிரேட்டில் 200 சுற்றுலா ஸ்கூட்டர்களை மக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டுவந்துள்ளது RAKTA.

- Advertisment -

FENIX ஆப் மூலமாக 3 திர்ஹம்ஸ் செலவில் மக்கள் தங்களுக்கான ஸ்கூட்டர்களை புக் செய்யலாம். இந்த ஆப் மூலமாக வழங்கப்படும் பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் உள்ளூர் விதிமுறைகள் மூலமாக ஸ்கூட்டர்களை எவ்வாறு சட்டத்தின்படியும் பொறுப்புடனும் இயக்குதல் வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் மக்களுக்கு அளிக்கப்படும்.

தரக்கட்டுப்பாடு மற்றும் செயல்பாட்டுத்துறையின் இயக்குனர் முகமது ஹசீம் இஸ்மாயீல் இதுகுறித்துப் பேசுகையில்,” குறைவான செலவில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவண்ணம், குறைவான தூரங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு இந்த ஸ்கூட்டர் போக்குவரத்து பேருதவியாய் இருக்கும்” என்றார்.

இ-ஸ்கூட்டரில் செல்வோர் மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்திற்கு அதிகமாக செல்லக்கூடாது எனவும் மற்ற வாகனங்கள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் ஸ்கூட்டர்களை இயக்கவேண்டும் எனவும் இஸ்மாயீல் தெரிவித்தார்.

14 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்த ஸ்கூட்டரை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.