கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ராஸ் அல் கைமா அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி,
- பொது கடற்கரை மற்றும் பூங்காக்கள் 70 சதவீத மக்களுடன் இயங்கலாம்.
- மொத்த கொள்ளளவில் 60 சதவீத வாடிக்கையாளர்களுடன் மால்கள் இயங்க வேண்டும்.
- பொதுப் போக்குவரத்தைப் பொறுத்தவரையில் மொத்த திறனில் 50 சதவீத மக்கள் மட்டுமே பயணிக்க முடியும்.
- தியேட்டர்கள், பொழுதுபோக்கு கூடங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க வேண்டும்.
- உடற்பயிற்சி நிலையங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க வேண்டும்.
- நீச்சல் குளம், மற்றும் தனியார் கடற்கரைகளைக் கொண்டிருக்கும் ஹோட்டல்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க வேண்டும்.
- திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 10 பேர் மட்டுமே கலந்துகொள்ளலாம். இரங்கல் கூட்டமாக இருந்தால் 20 பேருக்கு அனுமதியுண்டு.
- சமூகத்தின் அனைத்து மக்களும் குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் வேண்டும்.
- உணவகங்களைப் பொறுத்தவரையில் இரண்டு டேபிள்களுக்கு இடையே குறைந்தபட்சம் 2 மீட்டர் இடைவெளி இருத்தல் வேண்டும். ஒரே குடும்பத்தைச் சேராத நபர்களாக இருக்கும்பட்சத்தில் ஒரு டேபிளுக்கு 4 பேர் மட்டுமே அமரலாம்.
சமூக மக்கள் மேற்கண்ட பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை விதிமுறைகளை கவனமுடன் பின்பற்றுமாறு அரசு தெரிவித்துள்ளது.