UAE Tamil Web

ஆழ்ந்த பள்ளத்தாக்கில் சிக்கிக்கொண்ட 9 பேரை மீட்பதற்காக 13 மணிநேரங்கள் நடந்துசென்ற அமீரக காவல்துறையினர்..!

UAE valley

ராஸ் அல் கைமாவின் ஆழ்ந்த பள்ளத்தாக்குகளை உடைய வாதி நக்ப் பகுதியில் ஆசியா மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்த 9 மலையேறும் வீரர்கள் சிக்கிக்கொண்டதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய மத்திய கட்டுப்பாட்டுத் துறையின் தலைமை இயக்குனர் பிரிகேடியர் டாக்டர் முகமது அல் ஹுமைதி (Mohammed Al Humaidi),” சிக்கலான பள்ளத்தாக்குப் பகுதியில் சிக்கிக்கொண்ட 9 பேரை மீட்க காவல்துறையினர் 13 மணிநேரங்கள் நடந்து சென்றனர். மிகவும் செங்குத்தான பள்ளத்தாக்குப் பகுதியைக் கடக்க உள்ளூர் வாசிகள் காவல்துறைக்கு உதவினார்கள்” என்றார்.

திங்கட்கிழமை தொடங்கிய இந்த மீட்பு நடவடிக்கை செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை தொடர்ந்தது. மீட்கப்பட்ட 9 பேரும் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

“வழக்கத்தைவிட குளிர்காலத்தில் மீட்புப் பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகமாக ஏற்படுகிறது. இதற்கு மிக முக்கியக்காரணம் மலையேறும் நபர்கள் போதிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாதது தான்” என ஹுமைதி குறிப்பிட்டார்.

இதேபோல பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த இருவர் ராஸ் அல் கைமாவில் உள்ள ஷாஹா மலைப்பகுதியில் சிக்கிக்கொள்ள, விமானப்படை அவர்களை விரைந்து மீட்டது குறிப்பிடத்தக்கது.

UAE valley
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap