UAE Tamil Web

அமீரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட “பிங்க் ஏரி” – வைரலாகும் புகைப்படங்கள்..!

pink lake

ராஸ் அல் கைமாவில் புதிய பிங்க் நிற ஏரி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஏமிராட்டி இளைஞர் ஒருவர் இந்த ஏரியைக் கண்டுபிடித்திருக்கிறார். அவர் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

- Advertisment -

ஷார்ஜாவைச் சேர்ந்த அம்மார் அல் ஃபார்சி (Ammar Al Farsi) என்னும் 19 வயது இளைஞர் தான் இத்தீவை கண்டுபிடித்திருக்கிறார். ராஸ் அல் கைமாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சரயா தீவில் இந்த பிரத்யேக ஏரி அமைந்துள்ளது.

கடற்கரையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் இந்த தீவுப் பகுதி அமைந்திருக்கிறது. அங்கு கண்டறியப்பட்ட இந்த மர்ம ஏரி 40 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் கொண்டிருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (EPDA) தலைமை இயக்குனர் டாக்டர். சைஃப் அல் கைஸ்,” பொதுவாக இம்மாதிரியான நீர்நிலைகளில் காணப்படும் சிவப்பு ஆல்காக்களின் காரணமாக நீரானது நிறம் மாறியிருக்கலாம். இருப்பினும் தகுந்த ஆய்வுகளை மேற்கொள்ளாமல் நீரின் நிறமாற்றம் குறித்த காரணங்களை அறுதியிட்டுச் சொல்ல முடியாது” என்றார்.