UAE Tamil Web

முறிந்த காலுடன் மலைப்பகுதியில் சிக்கிக்கொண்ட நபரை 20 நிமிடத்தில் மீட்ட காவல்துறை – வீடியோ..!

RAK Police

ராஸ் அல் கைமாவில் மலைப்பகுதியில் ஏறிய நபர் ஒருவர் தனது கால் எலும்பு முறிந்ததால் அங்கேயே அகப்பட்டுக்கொண்டிருக்கிறார்.

- Advertisment -

இதுகுறித்து தகவலறிந்த ராஸ் அல் கைமா காவல்துறையின் விமானப் படை மீட்புக் குழு மலைப் பகுதியில் தேடுதல் வேட்டையைத் துவங்கியது.

20 நிமிடத்திற்குள் கால் முறிந்த நிலையில் மலையில் தவித்திருந்த 30 வயது ஆசியாவைச் சேர்ந்த நபரை மீட்புப் படையினர் கண்டுபிடித்தனர்.

உடனடியாக அந்நபர் ராஸ் அல் கைமாவில் உள்ள சக்ர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.