UAE Tamil Web

மலையில் தவறிவிழுந்த நபர் : ஹெலிகாப்டர் மூலம் மீட்டது அமீரக காவல்துறை..!

NAT-RAK-police-air-wing-rescued--injured-hiker-

ராஸ் அல் கைமாவின் வாதி அல் தயா பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆசிய நாட்டைச் சேர்ந்த நபர் (30) ஒருவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்திருக்கிறார். இதனால் காயமடைந்தவரை ராஸ் அல் கைமா காவல்துறையின் வான்வெளி மற்றும் ஆம்புலன்ஸ், மீட்புப்படை மீட்டிருக்கிறது.

- Advertisment -

இதுகுறித்துப் பேசிய ராஸ் அல் கைமா காவல்துறையின் வான்வெளிப்படை தலைமை இயக்குனர் கர்னல் பைலட் சயீத் ரஷீத் அல் யமாஹி (Saeed Rashid Al Yamahi),” காவல்துறை செயல்பாட்டு அறைக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட உடனேயே ஆம்புலன்ஸ் மற்றும் மீட்புப்படை தயாரானது. வாதி அல் தயா பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலமாகச் சென்ற குழு, காயமடைந்தவரை விரைவில் கண்டுபிடித்தது. அவருக்கு முதலுதவி வழங்கிய பின்னர், அவர் அல் சக்ர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்” என்றார்.

மேலும், காயமடைந்தவருக்கு உதவிசெய்த அல் தயா பகுதி வாழ் மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். கலாச்சாரம், இனம் தாண்டி கஷ்டத்தில் உழலும் நபருக்கு உதவி செய்யவேண்டும் என்ற சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் இம்மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக இயக்குனர் குறிப்பிட்டார்.

அறிவுரை

“குடியிருப்பாளர்கள், குடிமக்கள் மற்றும் சுற்றுலா வாசிகள் மலையேற்றத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமாகப் பின்பற்றுவது நல்லது. காவல்துறை மற்றும் பிற துறைகள் அளித்திருக்கும் மலையேற்ற பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடந்திடல் வேண்டும்” என யமாஹி தெரிவித்தார்.