UAE Tamil Web

மலைகளில் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் – எச்சரிக்கும் அமீரக காவல்துறை..!

RAK-hiker-rescue

ராஸ் அல் கைமாவில் உள்ள ஷாஹா மலைப்பகுதியில் நேற்று பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த 2 நபர்கள் சிக்கிக்கொண்டதாக செயல்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ராஸ் அல் கைமாவின் விமானப்படைக்கு தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது.

- Advertisment -

இதனையடுத்து ராணுவ ஹெலிகாப்டர் ஷாஹா பகுதிக்கு விரைந்தது. குறைவான நேரத்தில் காயமுற்ற இருவரையும் மீட்புக்குழு கண்டுபிடித்திருக்கிறது. அவர்களுக்கு முதலுதவி தரப்பட்டு பின்னர் ராஸ் அல் கைமாவில் உள்ள சக்ர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள் இருவரும். மலையேறும் போது இருவருக்கும் காயம் ஏற்பட்டிருப்பதாக விமானப்படை தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய ராஸ் அல் கைமாவின் விமானப்படை தலைவர் கர்னல் சயீத் அல் யமாஹி,” மலைப்பகுதிகளில் மோசமான இடங்களுக்குச் செல்வதை மக்கள் தவிர்த்தல் வேண்டும். அதேபோல, சாலைக்கு அருகில் உள்ள வழிகளில் மலையேற்றம் செய்வது உசிதமான காரியம். தேர்ந்த அனுபவமுள்ள மலையேறும் வழிகாட்டிகளை அழைத்துச் செல்வது பாதுகாப்பானது” என்றார்.