UAE Tamil Web

வீட்டு பணிப்பெண்ணிற்கு குடியிருப்பு விசா ஏற்பாடு செய்து தர தவறிய ஸ்பான்சருக்கு அபராதம்.! நீதிமன்றம் தீர்ப்பு..

RAK

ஆசியாவை சேர்ந்த வீட்டு பணிப்பெண்ணிற்கு குடியிருப்பு விசா ஏற்பாடு செய்து தர தவறியதற்காக, அரபு ஸ்பான்சர் ஒருவருக்கு ராஸ் அல் கைமா சிவில் நீதிமன்றம் 7,125 திர்ஹம்ஸ் அபராதம் விதித்துள்ளது.

- Advertisment -

நீதிமன்ற பதிவுகளின்படி, ரெசிடென்ஸ் விசா இல்லாத காரணத்திற்காக தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை தனது ஸ்பான்சர் மற்றும் உள்நாட்டு உதவியாளர் ஆட்சேர்ப்பு(domestic helper recruitment) அலுவலகம் செலுத்த, உத்தரவிட கோரியும், பாஸ்போர்ட்டை திருப்பி தர கோரியும் ராஸ் அல் கைமா சிவில் நீதிமன்றத்தில் பணிப்பெண் வழக்கு தொடர்ந்தார்.

இதனிடையே நீதிமன்றத்தில் ஸ்பான்சர் பணிப்பெண்ணுக்கு வழங்க வேண்டிய ஜூலை சம்பளம் 520 திர்ஹம்ஸ் வழங்கினார். இதனால் பணிப்பெண் ஸ்பான்சர் மீதான வழக்கை கைவிட்டார். எனினும் உதவியாளர் ஆட்சேர்ப்பு அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை உறுதியாக இருந்தார்.

ஆட்சேர்ப்பு அலுவலக பிரதிநிதி நீதிமன்றத்தில் வீட்டுப் பணிப்பெண்ணிற்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு பொறுப்பேற்க முடியாது என்று கூறினார். நீதிமன்றத்தில் ஒரு கடிதத்தை சமர்ப்பித்த பணிப்பெண்ணின் பிரதிநிதி பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார். குடியிருப்பு விசா இல்லாததால் பணிப்பெண் 7,125 திர்ஹம்ஸ் வரை அபராதம் செலுத்த வேண்டியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பணிப்பெண்ணிற்கு விதிக்கப்பட்ட 7,125 திர்ஹம்ஸ் அபராதத்தை ஸ்பான்சர் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், பணி அனுமதி வழங்குவதற்கான நடைமுறைகளை நெறிப்படுத்தும் ஆணையின் 6-வது பிரிவின்படி, வீட்டுப் பணிப்பெண்ணிற்கான குடியிருப்பு விசாவை வழங்கவும், ரத்து செய்வதற்கும் எதிராக உரிய கட்டணங்களை அவர்களின் ஸ்பான்சரே செலுத்த வேண்டும் என கூறியது.

வீட்டுப் பணிப்பெண்ணிற்கு பணம் செலுத்தி குடியிருப்பு விசாவை பெற்று தருவது ஸ்பான்சரின் பொறுப்பாகும். இதை செய்யத் தவறியதற்காக பணிப்பெண்ணிற்கு விதிக்கப்பட்ட அபாரதங்களுக்கும் ஸ்பான்சரே பொறுப்பேற்க வேண்டுமென நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. ஆட்சேர்ப்பு அலுவலகம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இடைத்தரகராக மட்டுமே செயல்படுவதால் அபராதங்களுக்கும், விசா ஏற்பாடு செய்து தருவதற்கும் பொறுப்பேற்க தேவையில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.