ராஸ் அல் கைமாவின் வாதி அல் பை (Wadi Al Baih) பகுதியில் இன்று அமீரக உட்கட்டமைப்புத்துறை பாதுகாப்பு பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறது. இதனை முன்னிட்டு, இன்று பொதுமக்கள் அமீரக ராணுவ வாகனங்களை எதிர்கொண்டால் அவற்றிற்கு வழிவிடும்படியும் அவற்றைப் புகைப்படம் எடுக்கவேண்டாம் எனவும் அரசு பொதுமக்களை எச்சரித்திருக்கிறது.
மக்கள் ராணுவ வாகனங்கள் செல்வதையும், ஹெலிகாப்டர்களையும் பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
காவல்துறைக்கு வழிவிடும்படி அரசு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இன்று காலை 8 மணிமுதல் 11 மணிவரையில் இந்த பாதுகாப்புப் பயிற்சிகள் நடைபெற இருக்கின்றன.