UAE Tamil Web

திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களைத் தற்காலிகமாக மூட உத்தரவு – ராஸ் அல் கைமா அரசு அதிரடி..!

Wedding

ராஸ் அல் கைமாவில் உள்ள திருமணம் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறும் ஹால்கள் மார்ச் 5 ஆம் தேதிவரை மூடப்படுவதாக ராஸ் அல் கைமா பொருளாதாரத்துறை நேற்று அறிவித்தது.

தற்போதைய கொரோனா சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்திருக்கிறது.

முன்னதாக நேற்று, கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ராஸ் அல் கைமா அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி,

  • பொது கடற்கரை மற்றும் பூங்காக்கள் 70 சதவீத மக்களுடன் இயங்கலாம்.
  • மொத்த கொள்ளளவில் 60 சதவீத வாடிக்கையாளர்களுடன் மால்கள் இயங்க வேண்டும்.
  • பொதுப் போக்குவரத்தைப் பொறுத்தவரையில் மொத்த திறனில் 50 சதவீத மக்கள் மட்டுமே பயணிக்க முடியும்.
  • தியேட்டர்கள், பொழுதுபோக்கு கூடங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க வேண்டும்.
  • உடற்பயிற்சி நிலையங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க வேண்டும்.
  • நீச்சல் குளம், மற்றும் தனியார் கடற்கரைகளைக் கொண்டிருக்கும் ஹோட்டல்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க வேண்டும்.
  • திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 10 பேர் மட்டுமே கலந்துகொள்ளலாம். இரங்கல் கூட்டமாக இருந்தால் 20 பேருக்கு அனுமதியுண்டு.
  • சமூகத்தின் அனைத்து மக்களும் குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் வேண்டும்.
  • உணவகங்களைப் பொறுத்தவரையில் இரண்டு டேபிள்களுக்கு இடையே குறைந்தபட்சம் 2 மீட்டர் இடைவெளி இருத்தல் வேண்டும். ஒரே குடும்பத்தைச் சேராத நபர்களாக இருக்கும்பட்சத்தில் ஒரு டேபிளுக்கு 4 பேர் மட்டுமே அமரலாம்.

சமூக மக்கள் மேற்கண்ட பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை விதிமுறைகளை கவனமுடன் பின்பற்றுமாறு அரசு தெரிவித்துள்ளது.

 

Wedding
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap