UAE Tamil Web

அமீரகம்: இனி இது கட்டாயம்.! டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய விதிகளை அறிவித்த அதிகாரிகள்..

licence

ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் புதிய விதிகள் அமீரகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின் ராஸ் அல் கைமா எமிரேட்டில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிகளை போலீஸ் இன்று அறிவித்துள்ளது.

- Advertisment -

அதன்படி ஓட்டுநர் உரிமம் பெற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பயிற்சி பாடங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அனைத்து பிரிவுகளிலும் மற்றும் அனைத்து மட்டங்களிலும் (கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள், கனரக பேருந்துகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள்) ஓட்டுநர்களின் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான பயிற்சி மற்றும் தகுதி அளவில் துறை சில தரங்களை நிர்ணயித்துள்ளது.

இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள RAK போலீஸில் மத்திய செயல்பாடுகளுக்கான பொது இயக்குனராக பணியாற்றும் பிரிகேடியர் டாக்டர் முகமது சயீத் அல் ஹுமைதி, அனைத்து வாகன வகைகளுக்கும் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களும் ஓட்டுநர் பயிற்சி பாடங்கள்(15 training lessons) கட்டாயமாகும் என்றார்.

போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிம விண்ணப்பதாரர்கள் இரவு பயிற்சி பாடங்களையும்(night training lessons) கிளியர் செய்ய வேண்டும். டெஸ்டிற்கு வரும் முன் இரவு பயிற்சி பாடங்கள் அவசியம். ஏனென்றால் இது இருட்டிய பிறகு பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது எப்படி என்பதை அறிய விண்ணப்பதாரர்களுக்கு உதவும் என்று குறிப்பிட்டுள்ளார் அதிகாரி அல் ஹுமைதி.

இதனிடையே எகிப்தைச் சேர்ந்த அமீரக குடியிருப்பாளர் ஷெரிப் அல் வகீல் கூறும் போது, ஒரு சில புதிய ஓட்டுனர்கள் அமீரக சாலைகளில் அதிலும் குறிப்பாக இரவில் வாகனங்களை இயக்க தேவையான அனைத்து திறன்களையும் சிறப்பாக கொண்டிருக்கவில்லை. எனவே ஓட்டுநர் பயிற்சி பாடங்களை கட்டாயமாக அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள RAK போலீஸ் திட்டத்திற்கு பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.

எமிராட்டியான முகமது இப்ராஹிம் கூறும் போது, குளிர்காலத்தில் சீரற்ற காலநிலையின் போது பெரும்பாலும் தெரிவுநிலை குறைவாகவும், மழை காரணமாக சாலைகள் மந்தமாகவும் இருக்கும். அப்போது ஓட்டுநர்கள் பயிற்சி பாடங்களை மேற்கொள்ள வேண்டும். நன்கு உதவும் என்றார்.

சாலைகள் மற்றும் போக்குவரத்து விதிகளின் தன்மை நாட்டிற்கு நாடு வேறுபடுவதால், சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியில் வெளிநாட்டு ஓட்டுநர்கள் அமீரக விதிகள் குறித்து விழிப்பு பெற்றவராக இருக்க வேண்டும். மூத்த ஓட்டுநர்களும் கூட புதிய பயிற்சி அமர்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் அவர்களின் கண்பார்வை மற்றும் பாதுகாப்பாக வாகனம் ஓட்டும் முறை ஆகியவற்றை அவ்வப்போது சரிபார்க்க இது வாய்ப்பாக இருக்கும் என்று கூறினார்.