விரைவில் அமீரகத்தின் தேசிய தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் போக்குவரத்து அபராதங்கள் மீது சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து போக்குவரத்து அபராதங்களிலும் 50% தள்ளுபடியை ராஸ் அல் கைமா மற்றும் அஜ்மான் காவல்துறைகள் அறிவித்துள்ளன.
அமீரகத்தின் 49-வது தேசிய தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ராஸ் அல் கைமா போலீஸ் அறிவித்துள்ள இந்த புதிய திட்டம் அனைத்து மீறல்கள் மற்றும் வாகன தண்டனைகளுக்கு 50% தள்ளுபடியை அறிவித்துள்ளது.
RAK-வில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த 50% தள்ளுபடி 2020 டிசம்பர் 2 முதல் டிசம்பர் 08 வரை ஏழு நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த சலுகை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வருவதையும், அவர்களின் நிதிச் சுமைகளைக் குறைப்பதையும், வழக்கு பதிவு செய்யப்பட்ட அனைத்து ஓட்டுநர்களுக்கும், குறிப்பாக பெரிய அபராதம் உள்ளவர்களுக்கு குறைந்த செலவில் தங்கள் ரெகார்ட்களை அழிக்க ஒரு நல்ல வாய்ப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
அஜ்மான் போலீஸின் சலுகை..
அஜ்மான் போலீஸால் அறிவிக்கப்பட்டுள்ள இதே 50% தள்ளுபடியானது, டிசம்பர் 2 துவங்கி ஒரு மாதத்திற்கு அமலில் இருக்கும் என அஜ்மான் போலீஸின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த சலுகை திட்டம் 2020 நவம்பர் 23-க்கு முன்னர் (அதாவது இன்று) அஜ்மானில் விதிக்கப்பட்ட அனைத்து வகையான அபராதங்களையும் உள்ளடக்கியது.
بتوجيهات عمار النعيمي
شرطة عجمان تخفض المخالفات المرورية بنسبة 50% بمناسبة اليوم الوطني pic.twitter.com/lQgmPgMtWl— ajmanpoliceghq (@ajmanpoliceghq) November 23, 2020
வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுவது அல்லது வாகனத்தின் இயந்திரம் அல்லது சேஸிஸில் மாற்றங்களைச் செய்வது போன்ற விதி மீறல்கள் இந்த சலுகை திட்டத்தின் கீழ் வராது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சலுகை திட்டங்களை பயன்படுத்திகொள்ளுமாறு மக்களுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.