UAE Tamil Web

முக்கியச்செய்தி: இன்றும் நாளையும் பல்வேறு சாலைகளை மூட அரசு உத்தரவு..!

cycle tour

அமீரக சைக்கிள் பயணம் (UAE Cycling Tour) நடைபெற இருப்பதால் இன்றும் நாளையும் பல்வேறு சாலைகள் மூடப்பட இருப்பதாக ராஸ் அல் கைமா காவல்துறை தெரிவித்திருக்கிறது.

- Advertisment -

நேற்று இரவு காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், ரேஸ் நடைபெறும் வீதிகள் மற்றும் சாலைகளை புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் (பிப்ரவரி 24, பிப்ரவரி 25) மூட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை சாலைகள் மூடப்படும் நேரம்: காலை 10.30 –  இரவு 11.30 வரை.

வியாழக்கிழமையில் ஜெபல் ஜெய்ஸ் மற்றும் மலையுச்சிக்கு செல்லும் வழியானது காலை 6.00 மணிமுதல் இரவு 5.00 மணிவரையில் மூடப்பட இருக்கிறது. அல் த்வைன் ரவுண்டானாவில் இருந்து ஜெபல் ஜெய்ஸ்க்கு செல்லும் சாலை மதியம் 1.15 முதல் ரேஸ் நடைபெறும் வரையில் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.