UAE Tamil Web

அதிவேகத்தில் இளைஞர் செய்த தவறு: அண்ணன், தம்பிக்கு நேர்ந்த சோகம்..!

Ras Al Khaimah road crash

ராஸ் அல் கைமாவில் காரில் பயணம் செய்துகொண்டிருந்த அண்ணன் (27) மற்றும் தம்பி (17) திடீரென ஏற்பட்ட விபத்தினால் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டீரிங் கட்டுப்பாட்டை இழந்ததால் கார், சாலையில் பலமுறை புரண்டிருக்கிறது. ஷமால் பகுதிக்குச் செல்லும் எமிரேட்ஸ் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது.

ராஸ் அல் கைமா காவல்துறையின் சாலைப் போக்குவரத்துப் பிரிவு இயக்குனர் பிரிகேடியர் அகமது அல் சாம் அல் நக்பி,” வாகனம் சாலையில் தடம்புரண்டு பல முறை சுழன்றதில் காரானது மொத்தமாக சேதமடைந்திருக்கிறது. ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததார். மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் மரணமடைந்தார்” எனத் தெரிவித்தார்.

வாகனவோட்டிகள் சாலை விதிமுறைகளை கவனமாக பின்பற்றுவதுடன், வேகக் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என நக்பி தெரிவித்திருக்கிறார்.

Ras Al Khaimah road crash
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap