ஷார்ஜாவில் கிரேன் மேலே விழுந்ததில் ஆசியாவை சேர்ந்த தொழிலாளி உடல் நசுங்கி பலி..!

Recovery truck worker crushed to death in UAE accident ( Photo: Khaleej Times)

மீட்பு வாகன கிரேனின் ஒரு பகுதி ஆசியாவை சேர்ந்த 30 வயதான தொழிலாளி மீது விழுந்ததில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று திங்கள்கிழமை ஷார்ஜாவின் தொழில்துறை பகுதி எண்.12-ல் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அதிகாலையில் போலீஸ் ஆபரேஷன் அறைக்கு அழைப்பு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள், ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு பிரிவு அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். பிறகு, அந்த தொழிலாளி ஏற்கனவே உயிரிழந்தார் என்பதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

இதனை தொடர்ந்து, இறந்தவரின் உடல் குவைத் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது, அங்கு அவர் இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான ஆரம்ப கட்ட விசாரனையில், உயிரிழந்த தொழிலாளியும் அவருடன் வேலை செய்யும் சக ஊழியர்களும் ஒரு பழுதடைந்த காரை தொழில்துறை பகுதி எண் 12 பட்டறைக்கு கொண்டு செல்ல முயற்சித்தது தெரியவந்துள்ளது.

மேலும், அவர்களில் ஒருவர் மீட்பு வாகனம் மூலம் இழுத்துச் செல்ல காரின் முன் முனையில் கயிற்றைக் கட்டியுள்ளார். இதை செயல்படுத்திய போது கயிறு அறுந்து, கிரேனின் ஒரு பகுதி தொழிலாளி மீது விழுந்தது விசாரனையில் தெரியவந்துள்ளது.

Source : Khaleej Times

Loading...