UAE Tamil Web

பள்ளிகளை 3 வண்ணங்களில் தரம்பிரிக்க முதல்வர்களுக்கு அறிவுறுத்தல்!

கோடை விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் அமீரகம் முழுவதும் பள்ளிகள் செயல்பட உள்ளன. கொரோனா பரவல் காரணமாக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கொரோனா பாதுகாப்பு கருதி பள்ளிகளை 3 வண்ணங்களில் தரம் பிரிக்குமாறு எமிரேட்ஸ் ஸ்கூல் ஆஃப் எஸ்டாப்லிஷ்மெண்ட் (ESE) அறிவுறுத்தியுள்ளது. நோய் தொற்று இல்லாத, போதிய இடவசதி உள்ள, மாணவர்கள் 1 மீட்டர் இடைவெளியுடன் அமரும் வகையில் வகுப்பறைகள் கொண்ட பள்ளிகளுக்கு அதன் முதல்வர்கள் பச்சை குறியீடு வழங்கலாம். இதேபோல நோய் தொற்று இல்லாத பள்ளிகளில் 1 மீட்டர் இடைவெளியுடன் மாணவர்கள் அமர வகுப்பறைகளில் போதிய இடவசதி இல்லாத பட்சத்தில் ஆரஞ்சு நிற குறியீடு வழங்கப்பட வேண்டும். பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் ஊழியர்கள் யாருக்கேனும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் உடனடியாக சம்மந்தப்பட்ட பள்ளிக்கு சிவப்பு நிற குறியீட்டை வழங்கி ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என பள்ளி முதல்வர்களுக்கு ESE சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link