அபுதாபியில் கொரோனா கட்டுப்படுகளுடன் இயங்கி வந்த வணிக நிறுவனங்கள், சுற்றுலா தளங்கள் இனி கட்டுப்படுகளிலின்றி செயல்படலாம் என்று அபுதாபியின் அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் குழு அறிவித்துள்ளது.
அத்துடன் 2 தடுப்பூசி செலுத்திக்கொண்ட குடியிருப்பாளர்களுக்கு Al Hosn கிரீன் பாஸ் 14 நாட்களிலிருந்து 30 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. இதன் மூலம் 2 தடுப்பபூசி செலுத்திய குடியிருப்பாளர்கள் Al Hosn ஆப்பில் கிரீன் பாஸில் மாதம் ஒரு முறை PCR பரிசோதனை செய்தால் போதும்.
இப்புதிய நடவடிக்கை இன்று ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாக அபுதாபியின் அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் குழு தெரிவித்துள்ளது.