UAE Tamil Web

ரோட்ட க்ராஸ் பண்ணும்போது கவனம் – துபாய் காவல்துறை எச்சரிக்கை

பாதசாரிகள் சாலையை கடக்கும்போது இடையூறு செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 500 திர்ஹம்ஸ் அபராதத்துடன் 6 கரும்புள்ளிகள் வழங்கப்படும் என துபாய் போக்குவரத்து ஆணையம் எச்சரித்துள்ளது. பாதுகாப்பு கருதி சாலையை கடக்க பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள வழிகளை பாதசாரிகள் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல விதிகளை மீறி சாலையை விரும்பப்படி பாதசாரிகள் கடக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் 400 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என துபாய் போக்குவரத்து ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல சிக்னல்களை மதிக்காமல் கவனக்குறைவான விபத்து ஏற்படுத்தும் விதமாக பாதசாரிகள் நடந்து சென்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 Share
Share via
Copy link