UAE Tamil Web

சரக்கு கண்டெய்னர்களின் விலை கிடுகிடு உயர்வு!

கொரோனா ஊரடங்கு எதிரொலியால் அமீரகத்தில் இருந்து சொந்த நாட்டிற்கு மக்கள் திரும்பி வரும் நிலையில் சரக்கு போக்குவரத்தின் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. மொத்தமாக வீடுகளை காலி செய்துவிட்டு செல்லும் மக்கள் கார்கோ, சரக்கு கண்டெய்னர்கள் மூலம் பொருட்களை இடமாற்றம் செய்வது வழக்கம். இந்த நிலையில் அமீரகத்தில் இருந்து பிரிட்டனுக்கு வெறும் 6 மீட்டர் நீளமுள்ள கண்டெய்னர்களில் பொருட்களை எடுத்துச் செல்ல கடந்த ஓராண்டில் மட்டும் 4 மடங்கு விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் அமீரகத்தில் இருந்து லண்டனுக்கு 1 கண்டெய்னருக்கு 700 டாலர் வரை விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது 3000 டாலராக உயர்ந்துள்ளது. சீனாவின் ஷாங்காயில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு 12 மீட்டர் நீளம் கொண்ட கண்டெய்னருக்கான சரக்கு கட்டணம் 2,000 டாலருக்கு இருந்த நிலையில் தற்போது சரக்கு போக்குவரத்து நலிவடைந்துள்ளதால் 12,000 டாலராக விலை உயர்வை சந்தித்துள்ளது.

2016ல் துபாயில் இருந்து சிங்கப்பூருக்கு பொருட்களை எடுத்துச் செல்ல கண்டெய்னருக்கு வெறும் 1,200 டாலர் மட்டுமே இருந்த நிலையில் இன்று 7,000 டாலர்கள் வசூலிக்கப்படுகிறது. ஒருசில துறைமுகங்களில் கண்டெய்னர்கள் சேராததால் 30க்கும் அதிகமான கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அமீரகத்தைச் சேர்ந்த லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.

1 Share
Share via
Copy link