அபுதாபி குடியிருப்பாளர்களின் பார்க்கிங் சேவைகள் டார்ப் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தை(ITC) பிரதிநிதித்துவப்படுத்தும் நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையினர்(DMT), வாடிக்கையாளர்கள் அனுபவத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்கள் அபுதாபி குடியிருப்பாளர்களின் பார்க்கிங் அனுமதி சேவை விண்ணப்பத்திற்கான புதுப்பிப்பை அறிவித்துள்ளனர்.
டார்ப் பிளாட்ஃபார்ம்-ன் இணையதளம் மற்றும் டார்ப் அப்ளிகேஷன் ஆகியவற்றில் குடியிருப்போர் பார்க்கிங் அனுமதி சேவை குறித்து வெளியிடப்பட்டுள்ளது. புதிய அமைப்பு, வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய குடியிருப்பாளர்களுக்கான பார்க்கிங் அனுமதிகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அனுமதித்துள்ளது.
எந்த ஆவணங்களும் இல்லாமல், காலாவதியான அனுமதிகளைப் புதுப்பிக்கவும், வாகனத் தகவல் அல்லது குடியிருப்புத் தகவலை மாற்றவும், தற்போதுள்ள குடியிருப்பாளர்களின் பார்க்கிங் அனுமதிகளில் உள்ள தகவல்களை மாற்றவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைகள் ‘Darb’ இயங்குதள இணையதளத்திலும், அதன் அப்ளிகேஷனிலும் கிடைக்கும்
வெவ்வேறு சேனல்கள் மூலம் சேவை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் இந்த முயற்சி, வேகம் மற்றும் துல்லியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும். அதே வேளையில், தனது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் டிஎம்டியின் உத்திக்கு உதவுவதாகவும் அமைந்துள்ளது.
மேலும் , ஒவ்வொரு முறையும் தவ்தீக் குத்தகை ஒப்பந்தம், அமீரக ஐடி அல்லது வாகனப் பதிவு போன்ற பார்க்கிங் அனுமதிகளுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் பதிவுகளை வழங்க ‘Darb’ தளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்யவேண்டிய அவசியமின்றி, உள் தரவு அமைப்புகளை ஒருங்கிணைத்து, வேகம் மற்றும் துல்லியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இதுமட்டுமின்றி, சேவைக் கட்டணம் மற்றும் மவாக்கிஃப் அபராதம் செலுத்துவதற்கான செயல்முறைக் கட்டணங்களும் பதிலாக ஒரே கட்டணமாக குறைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அபராதமும் நிலுவையில் இல்லாத நிலையில், விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து சேவைக் கட்டணத்தைச் செலுத்திய உடனேயே அனுமதி வழங்கப்படும் என்று ஐடிசி தெரிவித்துள்ளது.
வெற்றிகரமான குடியிருப்பாளர்களின் பார்க்கிங் அனுமதி விண்ணப்பம் குறித்து வாடிக்கையாளருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டு, அதற்கேற்ப புதிய செயல்முறைகள் புதுப்பிக்கப்படும். அனுமதி வழங்கிய நாளிலிருந்து 14 நாட்களுக்குள் விண்ணப்பத்தின் தகவலை மதிப்பாய்வு செய்வதிலும் ITC ஆதரவு குழு செயல்படும் என கூறப்பட்டுள்ளது.
டார்ப் தளத்தின் மூலம், தனிநபர் வாகனங்கள் அல்லது நிறுவன வாகனங்களின் மாவாஃபிக் அபராதம் பற்றி விசாரித்துச் செலுத்துவதற்கான விருப்பத்தையும் ITC வழங்கியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு எளிமையான முறையில் அபராதம் செலுத்த அனுமதிக்கிறது. வழங்கப்பட்ட 30 நாட்களுக்குள் அபராதம் செலுத்தப்பட்டால், அபராதத்தின் மொத்தத் தொகையில் இருந்து 25 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
அபுதாபியில் உள்ள அனைத்து குடியிருப்புப் பார்க்கிங் இடங்களுக்கும் சேவை விதிமுறைகள் கட்டாயபடுத்தப்பட்டுள்ளது. சமூகத்தின் பாதுகாப்பையும் அமீரகத்தின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் பராமரிப்பதை நோக்கமாகக் கொண்ட வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் அதன் இருப்பிடங்களின் பல பொது மற்றும் தனியார் தரநிலைகளையும் இந்த சேவை கடைபிடிக்கிறது.
சேவைக் கட்டணங்கள் மற்றும் அபராதங்கள் பற்றிய கூடுதல் தகவல்கள்களுக்கு, ஸ்மார்ட் டார்ப் பயன்பாடு மற்றும் “டார்ப் பிளாட்ஃபார்ம்” இணையதளத்தில் நீங்கள் காணலாம்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.