39.8 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

வெளிநாட்டிலிருந்து துபாய் திரும்புபவர்கள் கவனத்திற்கு : கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான செலவுகளை சமாளிப்பது எப்படி?

abudhabi airport

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் துபாய் குடியிருப்பாளர்கள் மீண்டும் துபாய் திரும்புகையில், தங்களுக்கான கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான (கொரோனா தொற்று உறுதிசெய்யப்படும் பட்சத்தில்) செலவுகளை எப்படி சமாளிப்பது என்பதனை விளக்குகிறது இந்தப் பதிவு.

கடந்த ஜூன் 21 ஆம் தேதி துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான உச்ச சபை, வெளிநாடுகளில் இருந்து துபாய் திரும்புபவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதுகுறித்து மேலும் தகவல் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

பயணிகளுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறையில், “கொரோனா பரிசோதனை, நோய்த்தொற்று உறுதியாகும் நிலையில் சிகிச்சைக்கான கட்டணங்களை ஏற்பேன் என உறுதிமொழி படிவத்தில் பிரயாணிகள் கையெழுத்திட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான கட்டணங்களை பயணிகள் முழுவதுமாக செலுத்த வேண்டுமா? என்னும் கேள்விக்கு பதில் அளித்த InsuranceMarket.ae -ல் தலைமை சந்தை அதிகாரியாக பணிபுரியும் திரு. ஹிதேஷ் மோத்வானி,” பயணிகள் பரிசோதனைகளுக்கான ஆரம்ப கட்டணங்களை செலுத்தவேண்டிவரும். தற்போதைய நிலையில் பயணிகளின் இந்த பரிசோதனைகளுக்கு காப்பீடு கைகொடுக்காது. ஏனெனில் மக்கள் தன்விருப்பத்தின் பெயரிலேயே பயணம் மேற்கொள்கிறார்கள்” என்றார்.

உங்களுடைய காப்பீட்டுத் திட்டமானது அனுமதியளிக்கும்பட்சத்தில், உங்களுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான கட்டணத்திற்கு நீங்கள் காப்பீடை நம்பலாம். அதாவது, உங்களுக்கு நோய் அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைக்குரிய கட்டணத்திற்கு நீங்கள் காப்பீட்டைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

“நீங்கள் துபாய் திரும்பியதற்குப் பிறகு உங்களுடைய உடல்நிலை பாதிப்பிற்கான மருத்துவ  கட்டணங்களை உங்களுடைய காப்பீடு எந்த அளவிற்கு ஏற்கும் என்பது உங்களுடைய காப்பீடு வழங்கும் நிறுவனத்தைப் பொறுத்தது” – நெக்சஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான, தருண் கண்ணா.

மேலும் கண்ணா,” தன்னுடைய மருத்துவ செலவுகளை ஏற்பேன் என நீங்கள் உறுதியளித்திருப்பதால், பயணத்திற்கு முன்பாகவே உங்களுடைய காப்பீடு வழங்கு நிறுவனத்திடம் உங்களின் காப்பீட்டுத் திட்டம் எந்த அளவிற்கு உங்களுக்கு உதவும் என்பதனை விசாரித்துக்கொள்ளுங்கள் என அறிவுறுத்துகிறோம். இதன்மூலம் மிக அதிகமான மருத்துவ கட்டணங்களை செலுத்துவதிலிருந்து நீங்கள் தப்பிக்கலாம்” என்றார்.

ஆகவே, உங்களுடைய காப்பீட்டுத் திட்டம் பற்றி தெளிவாக உங்களின் காப்பீடு வழங்குனரிடம் விசாரித்துக்கொள்ளுங்கள்.

என்னுடைய காப்பீட்டுத் திட்டம் எனக்கான கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கு உதவுமா?

கொரோனா நோய் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதால், காப்பீடு நிறுவனங்களின் கொள்கைகளில் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான செலவுகளை ஏற்பது குறித்த முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

அமீரக குடியிருப்பாளர்கள் தங்களது கொரோனா குறித்த செலவுகளுக்கு தங்களது காப்பீடு திட்டத்தை நம்பலாமா? என்பதை அமீரக அரசு மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் உடனடியாக தெளிவுபடுத்துகின்றன – கண்ணா.

“உங்களுடைய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தினைப் பொறுத்தே, எந்த அளவிற்கு உங்களுடைய மருத்துவ கட்டணத்திற்கு காப்பீடு பொறுப்பேற்கும் என்பது தீர்மானிக்கப்படுகிறது. இந்த வழிமுறைகள் புதிதாக வெளியிடப்பட்டவை ஆகையால் துபாய்க்கு வரும் மக்கள் தங்களது காப்பீடு நிறுவனத்திடம் எந்த திட்டம் தங்களுக்கு உகந்ததாய் இருக்கும் என்பதை கேட்டறிந்துகொள்ளுங்கள் என வலியுறுத்துகிறோம்” என்றார் கண்ணா.

துபாய் மற்றும் அபுதாபி குடியிருப்பாளர்கள் காப்பீடு எடுத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மற்ற எமிரேட்களில் பெறப்பட்ட விசாவை வைத்திருப்போரும் உங்களுடைய பொருளாதார நிலைக்குத் தகுந்தாற்போல் காப்பீடு எடுத்துக்கொள்வது சிறந்தது.

தற்போதைய நிலையில் கொரோனா பரிசோதனைக்கு 300 – 400 திர்ஹம்ஸ் வசூலிக்கப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற விரும்பினால் அதற்கு 800 – 1000 திர்ஹம்ஸ் செலவாகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் சிகிச்சைகளைப் பொறுத்து கட்டணங்களும் விதிக்கப்படுகின்றன. அதாவது, அறிகுறிகள் இல்லாதவர்கள், செயற்கை சுவாசம் தேவைப்படுவோர், நீண்டகால மருத்துவ உதவி தேவைப்படுவோர் ஆகியோருக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் வேறுபடலாம்.

“அதிக நாட்கள் மருத்துவ சிகிச்சை பெற்றவர் ஒருவர் 92 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். இப்படியான சூழ்நிலையில் மருத்துவ செலவு எவ்வளவு வரும் என்பதனை ஊகிக்கவே முடியாது. துரதிருஷ்ட வசமாக கட்டணம் 1 லட்சம் திர்ஹம்ஸ் வரை அல்லது அதற்கு கூடுதலாகவோ வரலாம். இதன் காரணமாகவே உங்களுடைய மருத்துவ காப்பீடு குறித்து நிபுணரிடம் ஆலோசனை பெறுங்கள் என நாங்கள் வலியுறுத்துகிறோம். எப்போதுமே காப்பீடு என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று” என கண்ணா தெரிவித்தார்.

சமீபத்தில் அமீரக அரசு வெளிநாடுகளில் தவிக்கும் துபாய் குடியிருப்பாளர்கள் மீண்டும் துபாய்க்குத் திரும்ப மக்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகளை அறிவித்திருந்தது. அதுபற்றி தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

இதையும் படிங்க.!