UAE Tamil Web

IPL 2021 – மீதிப் போட்டிகள் அமீரகத்தில் நடைபெறும் – BCCI அறிவிப்பு..!

IPL_

இந்தியாவில் நடைபெற்றுவந்த 14 வது IPL சீசன் போட்டிகள் கொரோனா காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் பிசிசிஐ -இன் தற்போதைய தலைவருமான கங்குலி தலைமையில் BCCI பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

எதிர்கால கிரிக்கெட் போட்டிகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், இக்கூட்டத்தில் பாதியிலேயே நிறுத்தப்பட்ட IPL 14 வது சீசனின் மீதிப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPL ன் கடந்த சீசனும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

IPL_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap