UAE Tamil Web

அபுதாபியில் தரமற்ற உணவுகளை விற்பனை செய்த உணவகங்களுக்கு சீல்!

அபுதாபியில் வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையமான (ADAFSA) சுகாதார விதிமுறைகளை மீறிய இரண்டு உணவகங்களை மூடியுள்ளது.

அபுதாபியில் உள்ள அல் தானா மற்றும் பாக் ரெஸ்டாரெண்ட் என்கிற உணவகங்களில் சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தரமற்ற உணவுகள் விற்பனை செய்யதுள்ளது.

இந்த நிலையில் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை மீறியதன் காரணமாக இந்த இரண்டு உணவகங்களும்  மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், விதிகளை மீறிய இந்த உணவகங்களுக்கு எச்சரிக்கைகள் விடப்பட்டதாகவும், இருப்பினும் மீண்டும் மீண்டும் உணவக விதிகளை மீறியதன் விளைவாக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினர்.

ஆய்வாளர்களின் அனைத்து உடல்நலம் மற்றும் பாதுகாப்புத் தரங்களையும் பூர்த்தி செய்து, அனைத்து மீறல்களையும் அகற்றிவிட்டால் உணவகம் திறக்க அனுமதி அளிக்கப்படும் என்று ADAFSA கூறியுள்ளது.

அதன் வரை இந்த உணவகங்களுக்கு மூடல் உத்தரவுகள் தொடரும் என்று ஆணையம் உறுதி அளித்தது.

மேலும், 800555 என்ற எண்ணில் அபுதாபி அரசாங்கத் தொடர்பு மையத்தைத் தொடர்புகொண்டு உணவுப் பாதுகாப்பு மீறல்கள் குறித்து புகாரளிக்குமாறு குடியிருப்பாளர்களிடம் ADAFSA கேட்டுக்கொண்டது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap