UAE Tamil Web

எக்ஸ்போ சிட்டிக்கு இலவச பேருந்து சேவை துவக்கம் – RTA வின் புதிய அறிவிப்பு..!

RTA BUS

துபாய் குளோபல் வில்லேஜ் பகுதியில் இருந்து துபாய் எக்ஸ்போ சிட்டிக்குச் செல்லும் இலவச பேருந்து வசதியை (ரூட்  294) இன்று துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் திறந்திருக்கிறது.

குளோபல் வில்லேஜின் 26 வது சீசன் இன்று துவங்குவதை முன்னிட்டு பார்வையாளர்களின் தேவையைக் கருத்தில்கொண்டு இந்த முடிவினை RTA எடுத்துள்ளது. அதேபோல, குளோபல் வில்லேஜிற்குச் செல்லும் 4 ரூட்களை மீண்டும் திறக்க இருப்பதாகவும் RTA அறிவித்திருக்கிறது. அவை,

அல் ரஷீதியா ஸ்டேஷன் – குளோபல் வில்லேஜ் (ரூட் 102) : ஒவ்வொரு 60 நிமிடத்திற்கும் ஒரு பேருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூனியன் ஸ்கொயர்குளோபல் வில்லேஜ் (ரூட் 103) : ஒவ்வொரு 40 நிமிடத்திற்கும் ஒரு பேருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல் குபைபா பேருந்து நிலையம்குளோபல் வில்லேஜ் (ரூட் 104) : ஒவ்வொரு 60 நிமிடத்திற்கும் ஒரு பேருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மால் ஆஃப் திஎமிரேட்ஸ் பேருந்து நிலையம்குளோபல் வில்லேஜ் (ரூட் 106) : ஒவ்வொரு 60 நிமிடத்திற்கும் ஒரு பேருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட ரூட்களில் பயணிக்கும் நபர்களுக்கு கட்டணமாக 10 திர்ஹம்ஸ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வழித்தடத்தில் டீலக்ஸ் பேருந்துகளும் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

இதே நேரத்தில் மிராக்கிள் கார்டன் செல்லும் ரூட் 105 ஐயும் திறப்பதாக RTA அறிவித்துள்ளது. அதன்படி,

மால் ஆஃப் திஎமிரேட்ஸ் பேருந்து நிலையம் – மிராக்கிள் கார்டன் (ரூட் 105) : ஞாயிறு முதல் வியாழன் வரையிலான நாட்களில் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் ஒரு பேருந்தும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 20 நிமிடங்களுக்கு ஒரு பேருந்தும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணமாக 5 திர்ஹம்ஸ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

RTA BUS
6 Shares
Share via
Copy link