UAE Tamil Web

அமீரகத்தை சுற்றிவந்து பார்வையாளர்களை ஈர்த்த பழங்கால கார்

அமீரகம், ராஸ் அல் கைமாவில் பழங்கால கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது ஜெபல் ஜைஸ் மலைப்பகுதி வழியாக வந்த அந்த கார்களின் அணிவகுப்பு பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இத்தாலி நாட்டில் பிரபலமான ‘1000 மிக்லியா’ என்ற தலைப்பில் ஆண்டுதோறும் பழங்கால கார்களின் அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பழங்கால கார்கள் சேகரிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இத்தாலியில் நடத்தப்படும் இந்த அணிவகுப்பில் 1,600 கி.மீ தொலைவிக்கு பிரசியா மற்றும் ரோம் நகரங்களுக்கு இடையில் இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

இந்நிலையில் நடப்பு ஆண்டில் இந்த பழங்கால கார்களின் அணிவகுப்பினை அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, ஃபுஜேராவில் இந்த பழங்கால கார்களின் அணிவகுப்பு தொடங்கியது. வளைகுடா நாடுகளை சேர்ந்த 44 பேர் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர். தொடர்ந்து 2வது நாளாக ராஸ் அல் கைமாவின் உயரமான மலைப்பகுதியான ஜெபல் ஜைஸில் கார் அணிவகுப்பு நடைபெற்றது.

பழங்கால கார்களின் அணிவகுப்பை பார்வையிட இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஏராளமான பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். பழங்காலத்தில் உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களின் கார்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு சாலையில் சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

1950ஆம் ஆண்டில் தொடங்கி 1970ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்ட கார்கள் இதில் பங்கேற்றன. இறுதியாக அந்த கார்கள் ஷார்ஜா வழியாக துபாய்க்கு வந்தடைந்தது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap