34.3 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

வெளிநாட்டில் இருந்து அமீரகம் திரும்ப விரும்புபவர்கள் தங்களது பயணத்திற்கு முன்பாகவே கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் – அமீரக அரசு அறிவிப்பு!

COVID-19-in-UAE---swab-test--_

வெளிநாடுகளில் இருந்து ஜூலை 1 முதல் அமீரகம் திரும்ப இருப்பவர்கள் தங்களது பயணத்திற்கு முன்பான 72 மணி நேரத்திற்குள் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அமீரக தேசிய அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA), அமீரக அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) ஆகியவை தெரிவித்துள்ளன.

நெகட்டிவ் என வந்தால் மட்டுமே அனுமதி

தற்போது 17 நாடுகளில் உள்ள 106 நகரங்களில் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் மட்டுமே அமீரகம் திரும்ப இருப்பவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மேலும், பயணத்திற்கு முன்பான 72 மணி நேரங்களுக்குள் டெஸ்ட் எடுக்கப்பட்டு, முடிவில் நெகட்டிவ் என வந்தவர்கள் மட்டுமே விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இன்னும் சில நாட்களில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் பரிசோதனை மேற்கொள்ளாதோர், அமீரகம் திரும்பிய உடனேயே பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கான கட்டணங்களை பயணிகளே ஏற்கவேண்டும்.

நேரக் கட்டுப்பாடு காரணமாக ஆய்வகங்கள் டிஜிட்டல் முறையில் பரிசோதனை முடிவுகளை வழங்கும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

அமீரகம் திரும்பும் மக்கள் அனைவரும் அங்கீகரிக்கப்பட்ட அப்ளிகேஷனை தரவிறக்கிக்கொள்ள வேண்டும். தனிமைப்படுத்தலின்போது அவர்களை மற்றும் அவர்களது உடல்நிலையைக் கண்காணிக்க இந்த அப்ளிகேஷன் உதவும் என அதிகாரிகள் கூறினர்.

இதையும் படிங்க.!