இனி இந்தியாவின் Rupay ATM கார்டை அமீரகத்திலும் பயன்படுத்தலாம்!

Around 175,000 merchant acceptance locations of 21 businesses and 5,000 ATMs in the UAE will soon start accepting India’s RuPay card, it was announced on Saturday.

ஐக்கிய அரபு அமீரகத்தில் “ஆர்டர் ஆப் சயீத்” விருது பெறுவதற்காக வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி Rupay கார்டை அறிமுகம் செய்துள்ளார்.

அமீரகத்தில் 21 வணிக குழுமங்கள் மற்றும் 5000 ஏடிஎம் இயந்திரங்களில் ஏறக்குறைய 1,75,000 வணிகர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இந்தியாவின் Rupay கார்டை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சனிக்கிழமை நடைபெற்ற அறிமுக விழாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், பூடான், மியான்மர், நேபாள் நாடுகளை தொடர்ந்து முதல் மத்திய கிழக்கு நாடான அமீரகத்தில் RUPAY கார்டு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.

அரசுமுறை பயணமாக UAE சென்றுள்ள மோடி, UAE நாட்டில் இந்தியாவின் தயாரிப்பான RUPAY கார்டினை அறிமுகம் செய்துள்ளார். அதோடு நில்லாமல் RUPAY பயன்பாட்டை உடனடியாக சந்தைக்கு கொண்டுவந்தது மட்டுமல்லாமல், தானே இந்தியாவின் RUPAY கார்டினை பயன்படுத்தி ஒரு கிலோ லட்டினை வாங்கி விற்பனையை தொடங்கி வைத்தார்.

அமீரகத்தில் Emirates NBD, First Abu Dhabi Bank மற்றும் Bank of Baroda ஆகிய மூன்று வங்கிகள் விரைவில் RUPAY கார்டை வழங்கும், என்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதர் நவ்தீப் சிங் சூரி வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.

Rupay கார்டு அறிமுகப்படுத்தப்பட உள்ள முதல் 21 வணிக குழுமங்கள்; NMC Healthcare, Lulu Group, Aster DM Healthcare, Landmark Group, Sobha Ltd, Apparel Group, Nikai Group, Regal Group of Companies, ITL Cosmos, Jashanmal National Company, Allana Group FMCG Products, Petrochem Middle East, Transworld Group, Al Dobowi Group, VPS Healthcare, UPL Group, Conares, Al Maya Group, EPS Facilities Services Group, Emaar and DP World.

Loading...