அமீரகத்தின் வாடகைப் போக்குவரத்து சேவை நிறுவனமான கரீம் மற்றும் துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் இணைந்து சுற்றுலாவாசிகளை கவரும் விதத்தில் புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளன.
வரும் வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் (டிசம்பர் 24, 25) கரீம் பைக்குகளை வாடகைக்கு எடுத்து நீங்கள் துபாயை சுற்றிப் பார்க்கலாம். வழக்கமாக இந்த பைக்குகளுக்கு 20 திர்ஹம்ஸ் கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால் இது தற்போது 1 திர்ஹம்சாக குறைக்கப்பட்டுள்ளது.
- JLT
- துபாய் மெரினா
- துபாய் மீடியா சிட்டி
- தி கிரீன்ஸ்
- ஜுமேரா
- கெனால்
- டவுன்டவுன் (Downtown)
- மன்கூல்
- கராமா
- அல் குத்ரா
ஆகிய இடங்களில் உள்ள கரீம் பைக் ஸ்டேஷன்களுக்கு மேற்கண்ட தேதிகளில் சென்று நீங்கள் பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்.
View this post on Instagram